News October 13, 2025
தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த ஆட்சியர் சுப்புலட்சுமி

வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.13) பட்டாசு விற்பனையை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு 85 லட்சத்திற்கு பட்டாசு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாவட்ட மக்கள் அனைவருக்கும் தன்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
குடியாத்தம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் லிங்குன்றம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சரவணன் (32), வெங்கடேசன் (61), ரகுபதி (35), ராகவன் (30), சேர்ந்த ரவி (48) ஆகிய 5 பேரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News October 13, 2025
சட்டக்கல்லூரியில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டிடம் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக காட்பாடியில் உள்ள வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் ரூ.6.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் தொடர்ந்து ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (அக்.13) குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் 1வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News October 13, 2025
அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்த ஆட்சியர் சுப்புலட்சுமி

வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (அக்.13) காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார் (இடைநிலை), ரமேஷ் (தனியார் பள்ளிகள்), திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிஸ்வரப்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.