News September 10, 2025
தீபாவளி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008இன் கீழ் தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 10.10.2025 வரை (https//www.tnesevai.tn.gov.in) இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
தென்காசி: மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மாலை முதல் பெய்தது. இதன் காரணமாக தென்காசி வட்டார சுற்று பகுதிகளில் மழை பெய்த நிலையில் (செப்டம்பர் 9) நேற்று சங்கரன்கோவில் – குருவிகுளம் செல்லும் சாலையில் மின்னல் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 9, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (09.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News September 9, 2025
தக்காளிக்கு விலை இல்லாததால் ரோட்டில் கொட்டிய விவசாயிகள்

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை நம்பி ஏராளமானோர் வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனிடையே கருநீர்குளம் பகுதியில் விளைச்சலுக்கு வந்திருந்த தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்ற வேதனையில் விவசாயிகள் தக்காளியை ரோட்டோரத்தில் கொட்டினர். விளைச்சல் அதிகமாக இருந்தும் போதிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.