News October 23, 2024
தீபாவளி நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளியையொட்டி நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே எழும்பூர், செங்கல்பட்டு, நெல்லை வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அக்.,29 மற்றும் நவ.,5ம் தேதிகளில் இரவு 11.45க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06001) மறுநாள் பகல் 12.15-க்கு கன்னியாகுமரியை சேரும். இந்த ரயிலுக்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
திருநெல்வேலி: உங்களிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா..?

திருநெல்வேலி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 12, 2026
திருநெல்வேலி: வழிப்பறி செய்த சிறுவன்; இருவர் கைது

கீழ கல்லூரை சேர்ந்த பழனி(21) என்பவர் மேலப்பாளையம் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் நேற்று காலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரமாணிக்கபுரம் சுடலைமுத்து (19) மற்றும் ஒரு சிறார் அவரை பணம் கேட்டு மிரட்டி தொடர்ந்து அச்சுறுத்தி அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்து சென்றனர். மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
News February 12, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.11) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த அன்டோ ஆரோக்கியராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.


