News October 20, 2025

தீபாவளி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவசர அறிவிப்பு!

image

இந்த தீபாவளியை ஒலி, புகை இல்லா பசுமை தீபாவளியாக கொண்டாடுவோம் எனவும், குறைந்த சத்தம் மற்றும் குறைந்த மாசு உண்டாக்கும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன் படுத்தவும். அனுமதிக்கப்பட்ட நேரமான காலை 6.00 முதல் 7.00 வரை, மாலை 7.00 முதல் 8.00 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கவும். பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் அருகே வெடிக்க வேண்டாம் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News October 20, 2025

கிருஷ்ணகிரி: விபத்தில் ஒருவர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பலேப்பள்ளி அடுத்த எலத்தகிரியை சேர்ந்த மார்டின் என்பவர் நேற்றிரவு கந்திகுப்பம் அடுத்த ராயப்பனூர் பகுதியில் தனது ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News October 20, 2025

கிருஷ்ணகிரி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News October 20, 2025

கிருஷ்ணகிரி: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

image

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!