News October 26, 2024

தீபாவளிக்கு வாரச்சந்தை தேதி மாற்றம்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இதில் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அடுத்த வாரம் (ஆக்.31) ஆம் தேதி தீபாவளி வருவதால் அதற்கு முதல் நாள் (ஆக்.30) புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 3, 2026

சிவகங்கை: உங்க வீட்டுல குழந்தை இருக்கா.? கலெக்டர் குட் NEWS

image

சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள பெற்றோர்கள், எந்தவித தயக்கமும் இன்றி தங்களை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 வயது முதல் 6 வயது வரை ஆன குழந்தைகளை தவறாது அங்கன்வாடி மையத்தில் சேர்த்து பயனடைய மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி அழைப்பு விடுத்துள்ளார். இதை தேவைப்படுவோருக்கு SHARE பண்ணி உதவுங்க.

News February 3, 2026

சிவகங்கை: குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 484 மனுக்கள்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 484 மனுக்கள் பெறப்பட்டன.

News February 2, 2026

சிவகங்கை: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க..

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சிவகங்கை மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!