News December 12, 2025
தீபத்தூண் அல்ல.. சர்வே தூண்: கோயில் செயலர்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே தூண் தான் என சொல்வதற்கான ஆதாரங்கள் குறித்து மதுரை HC நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு கோயிலின் செயல் அலுவலர், மலை மீது இருப்பது கிரானைட்டால் ஆன தூண் தான் என்றும் பதிலளித்தார். அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலைகளை அளப்பதற்காக வைக்கப்படும் சர்வே தூண் மட்டுமே எனவும் கூறியுள்ளார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை திங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 1, 2026
நான் லஞ்சமே வாங்கியதில்லை: துரைமுருகன்

தனது 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். 1971 முதல் காட்பாடி தொகுதியை கோயிலாகவும், அங்குள்ள மக்களை தெய்வங்களாகவும் எண்ணி பணியாற்றி வருவதாகவும் உருக்கமாக பேசியுள்ளார். மேலும், இதுவே (2026) தன் கடைசி தேர்தல் என்ற அவர், அடுத்த 5 ஆண்டுகளில் எஞ்சிய பணிகளை இத்தொகுதி மக்களுக்கு செய்துவிட்டு விடைபெறுவேன் எனவும் தெரிவித்தார்.
News April 1, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹3,040 உயர்வு!

மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹380 உயர்ந்து ₹14,050-க்கும், சவரனுக்கு ₹3,040 அதிகரித்து ₹1,12,400-க்கும் விற்பனையாகிறது. <<19529289>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 2% உயர்ந்துள்ளதன் எதிரொலியாக நம்மூர் சந்தையிலும் தடாலடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
News April 1, 2026
ஒரே ஓவரில் 11 பந்துகள்.. மோசமான ரெக்கார்டு!

IPL-ல் ஒரு ஓவரில் அதிக பந்துவீசிய பவுலர் என்ற மோசமான ரெக்கார்டை அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார். GT-க்கு எதிரான மேட்ச்சில் 4 வைட், 1 நோ பால் உள்பட அவர் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசினார். ஏற்கெனவே, RCB சிராஜ் (vs MI, 2023) CSK துஷார் தேஷ்பாண்டே(vs LSG, 2023), LSG ஷர்துல் தாக்கூர் (vs KKR, 2025), RR சந்தீப் சர்மா (vs DC, 2025), MI ஹர்திக் (vs GT, 2025) ஆகியோரும் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர்.


