News February 2, 2025
தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையம் காவல் நிலையம் முன்பு நேற்று காலை ஆட்டோ ஓட்டுனர் சேகர் என்பவர் தனது மகன் மீது போலீசார் கஞ்சா வழக்கு போட்டிருப்பதாக மனமடைந்து காவல் நிலையம் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். தற்பொழுது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
12-ம் வகுப்பு தேர்வு: 300 பறக்கும் படை அலுவலர்கள்

கோவை மாவட்டத்தில் 365 பள்ளிகளைச் சேர்ந்த 35,712 மாணவ, மாணவிகள் நாளை (மார்ச் 2) முதல் 26-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தவிர்க்க 300 பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் 130 துறை கண்காணிப்பாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
News March 1, 2026
“மாசாணியம்மன் எக்ஸ்பிரஸ்” பெயர் கோரி மனு

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட பொள்ளாச்சி ரயில் நிலையத்தை நரேந்திர மோடி மதுரையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவிடம், பாலக்காடு–சென்னை ரயிலுக்கு “மாசாணியம்மன் எக்ஸ்பிரஸ்” என பெயரிட கோரி, ஆனைமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர்.
News March 1, 2026
கோவை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.


