News September 8, 2025

தி.மலை: WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News September 8, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

தி. மலையில் சக்திவாய்ந்த முருகன் ஆலயம்!

image

தி.மலை, சோமாசிபாடியில் குன்றின் மீதுள்ள பாலசுப்பிரமணி கோயிலில் 3 தீர்த்தங்கள் உள்ளது. கிருத்திகை தினங்களில் மாலை நேரத்தில் தீர்த்தத்தில் செங்கழுநீர் கொடி வேர்ப்பாகத்தில் மலர்ந்துள்ள பூவினை தேடுவர். சிறிய அரும்பு ஒன்று கிடைக்கும். இந்த பூ பச்சை நிறத்தில் இருந்தால் நல்ல மழை பெய்யும் என்று நம்பப்படுகிறது. இந்த பூ எடுக்கும் நிகழ்வை கண்டால் சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

தி.மலை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

தி.மலை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!