News August 12, 2025
தி.மலை: 8வது போதும் கைநிறைய சம்பளத்தில் அரசு வேலை!

தி.மலை மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT
Similar News
News August 12, 2025
தி.மலை மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தி.மலை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 12, 2025
திருவண்ணாமலை 3 அரசு பள்ளிக்கு பூட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 அரசு பள்ளிகள் தற்போது மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 207அரசு பள்ளிகளில் ஒரு மாணவ மாணவிகள் கூட (பூஜ்ஜியம்) பள்ளியில் சேர்வதற்கு முன் வராத நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அந்த 207பள்ளிகளை முற்றிலுமாக மூடுவதாக தமிழக அரசு முடிவு எடுத்து உள்ளது. அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
News August 12, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆக.12) செங்கம், கலசப்பாக்கம், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் விவரங்களை மேலே உள்ள படத்தை காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.