News November 3, 2025

தி.மலை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 3, 2025

JUST NOW: தி.மலையில் சோழர் கால தங்கப்புதையல் கண்டெடுப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அருகே உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிவன் கோயில், 3ம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்நிலையில், கோவிலின் சிதிலமடைந்த கருவறையை கட்டுவதற்காக இன்று (நவ.3) பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக்காசுகளை அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

News November 3, 2025

சென்னை–திருவண்ணாமலை ரயில் கோரி எம்.பி. கடிதம்

image

திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை–திருவண்ணாமலை பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை விரைவில் இயக்கவும், திருவண்ணாமலை–கோயம்புத்தூர் இடையே புதிய இரவு நேர ரயில் சேவையை தொடங்கவும் ரயில்வே வாரியத் தலைவருக்கு, இன்று (நவ.3) திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கடிதம் எழுதியுள்ளார். மக்கள் கல்வி, வேலை, வணிக தேவைக்காக இந்த இரு ரயில்களும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

தி.மலை பெண்களே – உள்ளூரில் அரசு வேலை ரெடி!

image

திருவண்ணாமலை: சமூக நலன் & மகளிர் உரிமைத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, 10ம் வகுப்பு – முதுகலை படித்த, 20 முதல் 40 வயது பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்திற்கு (நவ.28)ம் தேதிக்குள் அனுப்பலாம்.

error: Content is protected !!