News May 6, 2024
தி.மலை: +2 தேர்வில் 99.2% தேர்ச்சி

தி.மலை +2 தேர்வில் 249 பழங்குடியின மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள ஏகலைவா பள்ளி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 251 மாணவ மாணவிகள் எழுதினர். அதில் 249 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். இந்த தேர்ச்சி 99.2% என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 28, 2026
தி.மலை: EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
தி.மலை: கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்ட நபர்

தி.மலை அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் தை கிருத்திகையை முன்னிட்டு தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. விரதம் இருந்த முருக பக்தர்களால் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை சுட்டு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. கொதிக்கும் எண்ணெயில் இருந்து பக்தரால் வடையை எடுத்ததும் அங்கிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர்.
News January 28, 2026
தி.மலையில் மளமளவென உயர்வு

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பூண்டு விலை உயர்ந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் கிலோ ரூ.100 – ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டின் விலை தற்போது தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.200 – ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டின் வரத்து குறைவால் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


