News December 31, 2025
தி.மலை: 10th போதும், போஸ்ட் ஆபீசில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 3, 2026
தி.மலையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 3, 2026
தி.மலை: கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து பலி!

சென்னையை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் முத்து (51) இவர் தி.மலையில் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக இவர் மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் தனது நண்பர் ஊரான செய்யாறு வட்டம் கீழ்நீர்குன்றம் கிராமத்தில் கூலி வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
தி.மலை மாவட்டத்தில் இன்று கரண்ட் கட் – உங்க பகுதி இருக்கா?

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ராயம்பேட்டை, சிறுநாத்தூர், மேக்களூர், நல்லான்பிள்ளைப்பெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுகுளம், ஆராஞ்சி, காட்டுவேளானந்தல் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மிதடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


