News October 26, 2025

தி.மலை: 10th போதும், அரசு வேலை !

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு <>விண்ணப்பிக்கலாம்<<>>. இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.28. ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 17, 2026

தி.மலை: கோயிலுக்கு வந்தவர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் குண்டூர் பிரம்மம்காரி தெருவைச் சேர்ந்தவர் தோட்டா சத்ய நாராயணா(55). நிதி நிறுவன அதிபரான இவர், நேற்று முன் தினம் தனது நண்பட்ர்களுடன் சிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது புதுமல்லவாடி கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீது இவரது கார் மோதியது. இதில் பலத்த பாயமடைந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமகா உயிரிழந்தார்.

News February 17, 2026

தி.மலையில் பரிதாப பலி!

image

வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(45). இவரது மகன் கனிஷ்(18), சென்னையில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரை சென்னைக்கு பஸ் ஏற்ற பைக்கில் பஸ் நிலையம் நோக்கி சென்றார். பைக்கை கனிஷ் ஓட்டினார். அப்போது, திண்டிவனம் சாலையில் பின்னார் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். தொடர்ந்து, கனிஷ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News February 17, 2026

தி.மலையில் விஷம் குடித்து தற்கொலை!

image

ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி தமிழ்செல்வி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், தமிழ்செல்வி கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கடந்த பிப்.14ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தவரை மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!