News November 15, 2025
தி.மலை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பர் மாத குறைதீர் கூட்டம் நவம்பர் 21-ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு ஆட்சியர் க.தாபகராஜ் தலைமையில் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறும். வேளாண், தோட்டக்கலை, கால்நடை, கூட்டுறவு உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். பொதுக் கோரிக்கைகள் மற்றும் தனிநபர் மனுக்கள் அளித்து விவசாயிகள் பயனடையலாம்.
Similar News
News November 15, 2025
தி.மலை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

தி.மலை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தி.மலை: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 15, 2025
தி.மலை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க விரும்புவோர் www.agrimark.tn.gov.in இணையதளத்தில் நவம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மத்திய அரசின் மானியத்துடன் அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கு தயார் நிலையில் உள்ளது. தேவைக்கேற்ப குத்தகைக்கு வழங்க தொழில் முனைவோர் அழைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


