News December 14, 2025
தி.மலை வரும் முதல்வர்!

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) மாலை 5 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கூட்டம் மற்றும் மண்டல அலுவலர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Similar News
News December 14, 2025
தி.மலை: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 14, 2025
தி.மலை: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

தி.மலை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 14, 2025
தி.மலையில் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலையில் 11 நாட்கள் நடைபெற்ற மகாதீப தரிசனம் டிசம்பர் 14, 2025 (இன்று) நிறைவுபெற்றது. டிச.3 ஆம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் அணைக்கப்பட்டதுடன், நாளை (டிசம்பர் 15) தீப கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


