News December 24, 2025

தி.மலை: ரேஷன் கார்ட் விண்ணப்பிக்க TRICK!

image

தி.மலை, புதிய ரேஷன் அட்டை (Smart Card) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <>லிங்கில் <<>>சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

தி.மலை: நில தகராறில் 3பேர் இடையே பயங்கர மோதல்

image

தி.மலை அடுத்த துர்கை நம்மிந்தல் பகுதியைச் சேர்ந்த முத்துராமன், கமலஹாசன் மற்றும் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி ஆகியோரிடையே நிலம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அருகருகே நிலம் வைத்துள்ள இவர்களுக்குள் நேற்று காலை ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பு புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 27, 2025

தி.மலை: வாக்கிங் சென்றவரை வெட்டிய கூலி படையினர்!

image

திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியை சேர்ந்த தண்டபாணி (55) டிசம்பர் 26 அன்று காலை 9 மணியளவில் தீப நகரில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத கூலி படையினரால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 27, 2025

திருவண்ணாமலை: வேளாண்மை கண்காட்சி

image

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் கண்காட்சி நாளை (டிச.27-28) சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 233 கிராம ஊராட்சிகளில் மற்றும் விவசாய துறைகளில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இயந்திரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!