News December 16, 2025

தி.மலை: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 17, 2025

தி.மலை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

தி.மலை மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

தி.மலை: முதியவர் மீது கார் மோதி பயங்கர விபத்து!

image

சேத்துப்பட்டு அடுத்த பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை பாண்டியாபுரம் பகுதியில் சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் சைக்கிளை தள்ளிக்கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது சேத்துப்பட்டில் இருந்து போளூர் நோக்கி சென்ற கார் கண்ணையன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

News December 17, 2025

தி.மலை வந்த பிரபல காமெடி நடிகர்; யார் தெரியுமா?

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு (டிச.16) நேற்று நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். அவருடன் பி.டி. ரமேஷ் குருக்கள், பி.டி.ஆர். கோகுல் குருக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். யோகிபாபுவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் ஆர்வமுடன் யோகிபாபுவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

error: Content is protected !!