News October 11, 2025

தி.மலை: ரத்த வெள்ளத்தில் கிடந்த தொழிலாளி!

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணக்குருக்கையை சேர்ந்தவர் கண்ணன். இருசக்கர வாகனத்தில் நேற்று (அக்.10) பாச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த இவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பாச்சல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

தி.மலை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி

image

நல்லவன்பாளையம் டேம் குழாய் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள் (70). இவர் கடந்த 9-ம் தேதி மாலையில் மாவு அரைக்கச் சென்றபோது, தி.மலை- தண்டராம்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசியம்மாள், தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

தி.மலை: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகேஸ்வரி (63), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த 4 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1,80,000 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!