News January 22, 2026
தி.மலை: மூதாட்டி சடலம் மீட்பு – விசாரணை!

தி.மலை, வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை பகுதியில் உள்ள விவசாய நில கிணற்றில் மூதாட்டி சடலமாக மிதந்து கிடப்பதாக பொன்னூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் ஜன.19 அன்று சடலத்தை மீட்டு உட்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். பின் விசாரணையில் வந்தவாசியை அடுத்த கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்த ருக்மணி (75) என்பது நேற்று தெரியவந்தது. மேலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
தி.மலை: செல்போன் டவரில் பேட்டரி திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ந.மோட்டூர் கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து 25 முதல் 100க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து மேலும் விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும். ஷேர் பண்ணுங்க!
News January 23, 2026
தி.மலை: புதிய பிஸ்னஸ் தொடங்க ஆசையா?

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைபபடுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


