News December 17, 2025

தி.மலை: முதியவர் மீது கார் மோதி பயங்கர விபத்து!

image

சேத்துப்பட்டு அடுத்த பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை பாண்டியாபுரம் பகுதியில் சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் சைக்கிளை தள்ளிக்கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது சேத்துப்பட்டில் இருந்து போளூர் நோக்கி சென்ற கார் கண்ணையன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Similar News

News December 19, 2025

தி.மலை: “திமுகவிற்கு ஆப்பு!”

image

தி.மலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் “கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் வரும் தேர்தலில் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்க வேண்டும் என்றார்.

News December 19, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!