News January 19, 2026
தி.மலை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

திருவண்ணாமலை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 27, 2026
தி.மலை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

தி.மலை மாவட்ட மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
தி.மலை: நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!

தி.மலை மாவட்டம் ஆரணியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போளூர் பகுதியை சேர்ந்த 4 பேர் ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த போது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு 4 பேரும் தப்பிய நிலையில், கார் மளமளவென தீ பிடித்து எரிந்து எலும்புகூடானது. இதனால் அங்கு ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.
News January 27, 2026
தி.மலை: விடுமுறையில் வேலை; பாய்ந்தது நடவடிக்கை!

குடியரசு தினவிடுமுறை நாளான நேற்று சட்டவிதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 70 நிறுவனங்கள் மீது தொழிலாளர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தி.மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது 70 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு வர சொன்னதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


