News September 23, 2025
தி.மலை: மின்சாரம் பாய்ந்து பலி

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் துணை மின் நிலைய ஊழியர் பிரபாகரன், புதுப்பாளையம் கிராமத்தில் புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்கம்பம் எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இன்று(செப்.23) உயிரிழந்தார். கண்ணமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (23.09.2025) திருவண்ணாமலை மாநகராட்சி, காஞ்சி சாலையில் விஜயபாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News September 23, 2025
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவின் எம்பிக்களுக்கு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதியில் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் தங்க வேண்டும் மாவட்ட நிர்வாகிகளோடு ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும், 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆரணி எம்பி தரணிவேந்தன் கலந்து கொண்டார்.
News September 23, 2025
தி.மலை: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <