News December 24, 2025
தி.மலை: மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாப பலி!

கலசபாக்கம் அருகே வடபுழுதியூர் கிராமத்தில், குரங்குகள் சேதப்படுத்திய மின்சார ஒயரை சரி செய்ய முயன்ற ராமசாமி (72) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது வீட்டின் பின்புறம் குரங்குகள் செய்த அட்டகாசத்தால் மின் கசிவு ஏற்பட்டிருந்தது. இதில் படுகாயமடைந்த அவர், தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கலசபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
தி.மலை: மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு!

கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (70) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நபர், நெசல் கிராமம் அருகே அவரை இறக்கிவிடும்போது கழுத்திலிருந்த 6 கிராம் தங்கத் தாலியைப் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
News December 26, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.