News April 6, 2025
தி.மலை மாவட்டத்தில் 439 காலி பணியிடங்கள் அறிவிப்பு

தி.மலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 254 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 439 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். ஆர்வமுள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.
Similar News
News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
News April 8, 2025
10ம் வகுப்பு கணித தேர்வு 609 மாணவர்கள் ஆப்சென்ட்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 499 பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் 147 மையங்களில் கணித பொதுத்தேர்வு நேற்று எழுதினர்.இதில் தேர்வு எழுத 30 ஆயிரத்து 635 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 30 ஆயிரத்து 26 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 609 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மாணவர்களுக்கான அறிவியல் பொதுத்தேர்வு வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது.
News April 8, 2025
அட இவங்க எல்லாரும் திருவண்ணாமலை காரர்களா?

அந்தோணி அமல்ராஜ் – மேசைப் பந்தாட்ட வீரர். அருணகிரிநாதர் – முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர். பதஞ்சலி சாஸ்திரி – இந்தியாவின் இரண்டாவது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. இராசாம்மள் தேவதாசு – இந்திய ஊட்டச்சத்து நிபுணர், கல்வியாளர். பவா செல்லதுரை – எழுத்தாளர், நடிகர். நித்தியானந்தம் – ஆன்மிகவாதி. கிருஷ்ணமூர்த்தி – நடிகர். உங்களுக்கு தெரிந்த தி.மலை பிரபலங்களை கமெண்ட் செய்யவும். ஷேர்