News December 13, 2024

தி.மலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இன்று (டிச.13) உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News April 4, 2026

தி.மலையில் 250 கோழிகள் இலவசம்!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News April 4, 2026

தி.மலை: இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம்!

image

தி.மலை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 9498794987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) & இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

News April 4, 2026

தி.மலை: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! தேர்வு கிடையாது

image

தி.மலை மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!