News March 24, 2024
தி.மலை: மாணவிகளிடம் சில்மிஷம்

கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் ஒரு மாணவியை கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாக தகராறு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மோகன் ராஜுவை கண்ணமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Similar News
News April 9, 2025
தி.மலையில் ICICI வங்கியில் நிதி ஆலோசகர் வேலை

தி.மலையில் இயங்கி வரும் ICICI வங்கியில் நிதி ஆலோசகருக்கான 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 25-60 வயதுக்குள் இருக்கும் எல்லா பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர வேலையான இதற்கு SSLC முடித்திருந்தால் போதுமானது. வரும் ஜூன் 11ஆம் தேதி வரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
News April 9, 2025
ஆரி எம்பிராய்டரி, ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக தாட்கோ மற்றும் தனியார் அகாடமி இணைந்து சென்னை வேளச்சேரியில் டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளி கைத்தொழில் பயிற்சி வழங்குகின்றன. 18-30 வயதினருக்கான இந்த 30 நாள் பயிற்சிக்கான தங்கும், உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். விண்ணப்பிக்க: [www.tahdco.com] இந்த தகவலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
News April 9, 2025
திருவண்ணாமலையில் தமிழ் கட்டாயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். வருகின்ற மே 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.