News August 8, 2025
தி.மலை மழையின் அளவு அட்டவணையாக வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (7-08-25 )ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம் ஆரணி ,சேத்பட் ,செய்யார், கீழ்பென்னாத்தூர்,செங்கம், வந்தவாசி பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் மி, மீட்டர் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மழை இராணிப்பேட்டை ஆற்காடு பகுதிகளில் பெய்து கொண்டிருக்கிறது இரவு 10 மணிக்கு மேல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
தி.மலை ஆட்சியர் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்

தி.லை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் (ஆகஸ்ட்-08) நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட வங்கியாளர்களுடன் ஆலோசனைக் குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் நடப்பு நிதி ஆண்டிற்கான 2025 – 2026 வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
News August 8, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
தி.மலை: EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!