News July 4, 2025
தி.மலை மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 2/2

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல்&தொல்லை, சட்ட விரோத கைது& தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.
Similar News
News August 23, 2025
தி.மலை முதலமைச்சர் கோப்பைக்கான தேதிகள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான தேதிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி இதில் (26-08-2025) முதல் (10-09-2025) வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் பல்வேறு பிரிவுகள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு சான்றிதழ் பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
News August 23, 2025
தி.மலையில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <
News August 23, 2025
காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.