News October 19, 2025

தி.மலை மக்களே நாளை இதை மறவாதீர்!

image

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

தி.மலை: காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

image

இன்று 21/10/2025 காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் இந்நிகழ்வில் அனைத்து ஆயுதப்ப டை காவலர்களும் கலந்து கொண்டனர். அதன் பின் அவர்களின் தியாகத்தை பற்றி பேசப்பட்டது.

News October 21, 2025

தி.மலை: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து வரும் நவ்.14ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் வேலை செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு கிடையாது. உடனே ஷேர் பண்ணுங்க

News October 21, 2025

தி.மலை ஆட்சியர் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராபி பருவ சம்பா நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். ஓர் ஏக்கருக்கு ரூ.538 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சிட்டா, ஆதார், வங்கி புத்தகம், சாகுபடி அடங்கல் ஆவணங்களுடன் பொதுசேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!