News April 28, 2024

தி.மலை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பாஸ்ட் மின்சார ரயில் சேவையானது  மாலை 6 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

Similar News

News November 20, 2025

தி மலை :உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

தாமரைக்கேணி மற்றும் மலை ஓடைகள் ஆக்கிரமிப்பு குறித்து மனுதாரர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா,நீதிபதி ஜி.அருள்முருகன் இன்று (நவ.20) விசாரித்தனர். 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதை நீதிமன்றம் கேள்வி எழுப்பி,உரிமை இல்லாத ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.

News November 20, 2025

தி.மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

image

தி.மலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. நாளை (நவ.21),வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தி.மலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளவும்.

News November 20, 2025

தி.மலை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!