News September 28, 2025
தி.மலை: போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கும்பல்!

ஆரணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த களம்பூர் போலீசார் மீது, கஞ்சா கடத்தி வந்த நபர்கள் காரை மோதிக் கொல்ல முயன்றனர். பின்னர், போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று ராஜ்குமார் (26) , சுனில்குமார் (26) ஆகிய இருவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை, ஆரணியில் விற்க முயன்றது தெரியவந்தது. கார் மற்றும் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
தி.மலை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

தி.மலை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
தி.மலை: உயிரை கையில் பிடித்து வாழும் மக்கள்

ஆரணி அடுத்த தச்சூர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருளர் இன குடும்பத்திற்கு சமத்துவபுரம் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், தொட்டாலே பெயர்ந்து விழுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும், வீடு கட்ட ஒதுக்கிய நிதியை கொள்ளை அடித்தவர்கள் மீது நடக்கடிகை எடுக்க வேண்டும் எனவும் குமுறுகின்றனர்.


