News September 12, 2025

தி.மலை: போக்ஸோ வழக்கில் 20 ஆண்டு சிறை

image

வந்தவாசி அருகே அருங்குணத்தை சேர்ந்த தொழிலாளி சதீஷ் (35), 2018ல் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், தி.மலை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். நீதிபதி காஞ்சனா, (செப்டம்பர் 10) அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ₹15,000 அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Similar News

News September 12, 2025

தி.மலை: மான் வேட்டையாடிய நபர் கைது

image

தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் பகுதியில் மான் வேட்டை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு ரோந்து சென்றது. அப்போது, வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெருமாள் என்பவர் மான் வேட்டையாடியது தெரியவந்தது. அவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வனத்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 12, 2025

தி.மலை: இளைஞர் விபரீத முடிவு

image

செய்யாறு கொடநகர், அரச மரம் தெருவைச் சேர்ந்த திலீப் (26), பாலிடெக்னிக் பட்டதாரி. செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. வயிற்று வலி அதிகமானதால், நேற்று (செப்.11) பெட்ரோல் நிலையத்தின் பின்பக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செய்யாறு காவல்துறையினர் விசாரிக்கின்றனர். எதற்கும் தற்கொலை தீர்வு அல்ல.

News September 12, 2025

தி.மலை இளைஞர்களே வேலை ரெடியா இருக்கு!

image

திருவண்ணாமலை வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், நாளை(செப்.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 5,000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!