News January 6, 2026

தி.மலை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தி.மலை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 1, 2026

தி.மலை தாய்மார்களுக்கு ரூ.11,000

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

தி.மலை: கோடி கோடியாய் கொட்டிய காணிக்கை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஜனவரி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் ரூ.5.68 கோடி ரொக்கமாகவும், 190 கிராம் தங்கத்தையும், 2390 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். முதல் நாள் ரூ.5.4 கோடியும், இரண்டாம் நாள் ரூ.22.77 லட்சமும் எண்ணப்பட்டது. இந்த காணிக்கை எண்ணும் பணி அலங்கார மண்டபத்தில் நடைபெற்றது.

News February 1, 2026

தி.மலை: நடிப்பு போட்ட கில்லாடி பாட்டி; ரூ.85,000 நாமம்!

image

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே வடமாநில மூதாட்டி ஒருவர் சாமியார் வேடத்தில் வந்து ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்து தண்ணீர் கேட்பதுபோல நடித்து ரூ.85,000த்தை திருடி சென்றுள்ளார். பால்சிங் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்த அந்த கில்லாடி மூதாட்டி இந்த திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். CCTV காட்சிகளை கொண்டு எந்த மூதாட்டியை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!