News December 26, 2025
தி.மலை: பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு இங்கே <
Similar News
News December 26, 2025
கலசப்பாக்கம்:முதல்வர் வருகை குறித்து ஆலோசனை

கலசப்பாக்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக நாளை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னிட்டு, (டிச.26) இன்று முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையில் கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News December 26, 2025
திருவண்ணாமலை மாவட்டத்தில் (டிச. 27) முதல்வர் சுற்றுப்பயணம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 27) தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அரசு விழா பங்கேற்கிறார். இந்நிகழ்வில், ரூ. 2,095.07 கோடி மதிப்பிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 2,66,194 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
News December 26, 2025
தி.மலை:முதல்வர் பங்கேற்பு விழா முன்னேற்பாடு பணி ஆய்வு

நாளை (டிச.25), தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. அந்த இடத்தினை இன்று (டிச.25) திமுக கழகம் மருத்துவ அணி துணை தலைவர் எ.வ.வே கம்பன் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். உடன் எம் எல் ஏ சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் உடன் இருந்தனர்,


