News September 12, 2025

தி.மலை: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

திருவண்ணாமலை மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த <>இணையதளம் மூலம்<<>> பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். SHARE பண்ணுங்க

Similar News

News September 12, 2025

தி.மலை: கோர்டில் கேஸ் நிலுவையில் இருக்கா?

image

தி.மலை மாவட்டதில் நாளை(13.09.2025) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் அதலாத் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சாலை விபத்து, போக்குவரத்து அபராதம், மின் கட்டணம், நிலத்தகராறு, ஜீவனாம்சம், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், செக் மோசடி, நுகர்வோர் போன்ற நிலுவையில் உள்ள சிறு வழக்குகளுக்கு இங்கு சென்று தீர்வு காணலாம்.

News September 12, 2025

தி.மலை: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <>இந்த<<>> லிங்க்/மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 12, 2025

தி.மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுகள், மா, கொய்யா, சீதாப்பழம், பப்பாளி, முருங்கை மரக்கன்றுகள், அழகு செடிகள், மூலிகைச் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நேரடியாகவும், அரசு மானியத்திலும் வழங்கப்படுகிறது. மேலும் விழாக்களில் பரிசாக மரக்கன்றுகள் வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஊக்குவிக்கப்படுகிறது என ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

error: Content is protected !!