News March 24, 2025
தி.மலை: பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் கவனத்திற்கு

தாட்கோ மூலம் பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கான புத்தாக்கப் பொறியாளர் பயிற்சிக்கு www.tahdco.com-ல் பதிவு செய்யலாம் என கலெக்டர் தர்பகராஜ் அறிவித்துள்ளார். 2022–2024 வரை பட்டம் பெற்ற, 21–25 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் கீழ் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் பயனடையலாம். 18 வார பயிற்சிக்கு தங்கும் வசதியுடன் வேலைவாய்ப்பு வாய்ப்பு வழங்கப்படும்.
Similar News
News November 1, 2025
திருவண்ணாமலை: வீடுகளின் மீது அடுத்தடுத்து கற்கள் வீச்சு!

செய்யாரில் டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோவில், தெருவில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் 8 வீடுகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதும் கற்கள் தொடர்ந்து விழுந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
News November 1, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – எம்.பி. பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவ.01) “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தரணிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டார். அவர், பொதுமக்களுடன் கலந்துரையாடி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசு துறைகள் இணைந்து சுகாதார பரிசோதனை நடைபெற்றது.
News November 1, 2025
தி.மலை :குழந்தை வரம் தரும் புத்திரகாமேட்டீசுவரர்

தி.மலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீசுவரர் கோவில். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு 7 திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து அதன் பின் சாப்பிட வேண்டும். இதே போன்று 7 நாட்களும் செய்யவேண்டும். ஷேர் பண்ணுங்க.


