News January 19, 2026

தி.மலை: பட்டப்களில் செயின் பறிப்பு

image

கண்ணமங்கலம் அருகில் உள்ள முருகாபாடி கிராமத்தில் வசிப்பவர் கனகா(65). இவர் மதிய நேரத்தில் தனது நிலத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 25 வயது உடைய மர்ம நபர் கனகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அதிர்ச்சியில் கனகா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிடும் பயனில்லை. புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Similar News

News January 23, 2026

BREAKING: தி.மலையில் கனமழை வெளுக்கும்

image

திருவண்ணமலை மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான விழுப்புரம் மாவட்டத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளிய செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

தி.மலையில் EB பில் எகுறுதா..?

image

தி.மலை மாவட்ட மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உடனே இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

JUST IN: தி.மலையில் காதலனை கைகழுவிய காதலி

image

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடியான மதன்குமார்- இறையூரை சேர்ந்த ஆனந்தி ஆகியோர் வீட்டை வெளியேறினர். காவல் நிலையத்திற்கு காரில் வந்துகொண்டிருந்த போது பெண்ணை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்தனர். மேலும், மகளின் காலில் பெற்றோர்கள் விழுந்ததால் மனம் மாறிய ஆனந்தி, காதலன் மதன்குமாரை கைவிட்டு பெற்றோருடன் சென்றார்.

error: Content is protected !!