News September 26, 2025

தி.மலை: திருமண திட்டமிடும் பெண்களுக்கு ரூ.50,000!

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

Similar News

News September 26, 2025

தி.மலைக்கு விஜய் எப்போது வருகிறார்? பயணத்தில் மாற்றம்

image

தவெக தலைவர் விஜய் தி.மலையில் வரும் நவ.8ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.15ஆம் தேதி தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News September 26, 2025

தி.மலை: தலை நசுங்கி கல்லூரி மாணவன் பலி!

image

தி.மலை, போளூர் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். தி.மலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் அரசு பேருந்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை வழக்கம் போல கல்லூரி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறிய போது, நிலை தடுமாறு கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பலியானார். இது குறித்து போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 26, 2025

தி.மலை கோயிலுக்கு வந்த பக்தர் உயிரிழப்பு!

image

தி.மலை கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் நேற்று மாலை சாயரட்சை அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சுரேஷ் என்ற பக்தர் கூட்ட நெரிசலால், சன்னிதிக்குள் மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பாதி வழியிலேயே உயிரிழந்தார். இது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!