News December 12, 2025
தி.மலை: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
Similar News
News December 14, 2025
தி.மலையில் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலையில் 11 நாட்கள் நடைபெற்ற மகாதீப தரிசனம் டிசம்பர் 14, 2025 (இன்று) நிறைவுபெற்றது. டிச.3 ஆம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் அணைக்கப்பட்டதுடன், நாளை (டிசம்பர் 15) தீப கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
தி.மலை: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 14, 2025
தி.மலை: டிராக்டர் மோதி பிளஸ்-2 மாணவர் பலி!

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ்(17) பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், நாய்க்கடிக்கு ஊசி போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மாணவர் லோகேஷ் மீது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு டிராக்டர் எதிர்பாராதவிதமாக லோகேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் பரிதாபங்க உயிரிழந்தார்.


