News December 19, 2025
தி.மலை: திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தி.மலை, தமிழ்நாடு முதல்வர் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டங்களை திறந்து வைக்கவும் மற்றும் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரும் டிச.27, 28ஆம் தேதிகளில் வருகை முன்னிட்டு, வரவேற்பு நிகழ்ச்சி குறித்து திமுக பகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர். எ.வ.வே.கம்பன் இன்று (டிச.19) ஆலோசனைகளை வழங்கினார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
Similar News
News December 25, 2025
தி.மலை: போலீஸ் லஞ்சம் கேட்டால் உடனே Call!

திருவண்ணாமலை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
தி.மலை: 40 பாட்டில் மது விற்பனையில் சிக்கிய பெண்கள்!

தண்டராம்பட்டு பகுதியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வாணாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றனர். அங்கு 4 பேரிடம் விசாரணை நடத்தினர். சாந்தா, சக்கரவர்த்தி, மொய்யூர் கிராமம் அம்பிகா வரகூர் கிராமம் சுசிலா தெரிந்தது. மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
News December 25, 2025
திருவண்ணாமலை: 38 பேர் அதிரடி கைது

செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள அரசு மதுக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மாவட்டத் தலைவர் எச்.ஜமால் தலைமையில் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட 16 பெண்கள் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


