News August 21, 2025

தி.மலை: தாசில்தார்,VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) திருவண்ணாமலை மாவட்ட அலுவகத்தை (04175-232619) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க*

Similar News

News January 31, 2026

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்; வந்தது அறிவிப்பு!

image

தி.மலையில் பிப். 1 ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, 2ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லா 8 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில் 12.40 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

தி.மலை: இன்று முதல் திறக்க உத்தரவு!

image

தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் மே.11 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் வலது, இடதுபுற கால்வாய்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 550 கனஅடி என மொத்தம் 5952 மில்லியன் கனஅடி நீர் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய பெருமக்கள் பயனடைவர்.

News January 31, 2026

தி.மலை: ஒரே இரவில் அடுத்தடுத்து கொள்ளை!

image

ஆரணி, மாமண்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரே இரவில் அடுத்தடுத்து 7 வீடுகளில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். பீரோக்களை உடைத்து தாலிச் செயின், கம்பல் என 10 சவரன் தங்க ஆபரணங்கள், கால் கொலுசு காப்பு என 200 கிராம் வெள்ளி மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!