News February 24, 2026
தி.மலை: டிராக்டர் வாங்க 80% மானியம்!

தி.மலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
Similar News
News March 1, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் ராணிப்பேட்டை, கோவையில் அழகு கலை பயிற்சி வழங்கப்படுவதாக தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இதில் 8ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது உடையவர்கள் பங்கேற்கலாம். தங்கும் இடம், உணவு உள்ளிட்ட செலவுகளை தாட்கோவே ஏற்கும். பயிற்சி காலம் 90 நாட்கள். ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலை. விருப்பமுள்ளவர்கள் <
News March 1, 2026
தி.மலை: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் பகுதியில் ஏதேனும் அவசரப் பிரச்சனைகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், உடனடியாக அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு 100 என்ற எண்ணை டயல் செய்து காவல்துறை உதவியைப் பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News March 1, 2026
தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் அக்னித்தலமாக விளங்கும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி மாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 2 மாலை 6.29க்கு தொடங்கி, மார்ச் 3 மாலை 5.52க்கு நிறைவு பெறுகிறது எனக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


