News December 13, 2025
தி.மலை: சொந்த ஊரில் வேலை; ரூ.40,000 வரை சம்பளம்!

தி.மலை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கீழ் இயற்கை மருத்துவ ஆலோசகர், பார்மசி, பல் மருத்துவர், பல் உதவியாளர், உதவியாளர், ஆலோசகர் பணிக்கு 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பும், மற்ற பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.8,950-ரூ.40,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த <
Similar News
News December 28, 2025
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
JUST NOW: வேன் மீது கார் மோதி விபத்து

செங்கம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசன்கன்னி கிராமத்தில் அதிகாலை சாலையில் சென்ற கார் ஆம்னி வேன் மோதிய விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயம். மேல் செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
தி.மலை: மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகன் மரம் சாவு

செய்யாறு அருகே கீழ்நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா (22), 8மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தவர். கடந்த 21-ஆம் தேதி மாமியார் வீட்டிற்குச் சென்ற ராஜா, பின்னர் மாயமானார். இந்நிலையில், பாண்டியம்பாக்கம் – சித்தாத்தூர் சாலை பாலத்தின் அடியில் அவர் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தூசி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது கொலையா, தற்கொலையா என்று போலீசார் விசாரணை.


