News January 20, 2026

தி.மலை: சிலிண்டர் வெடித்து விபத்து; விரைந்த கலெக்டர்

image

மணலூர்பேட்டையில் பலூன் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

Similar News

News February 2, 2026

ஆரணி: 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தற்கொலை!

image

தி.,மலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் பட்டதாரி வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கைப்பட கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 2, 2026

தி.மலை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

ஆரணி அருகே துடிதுடித்து பலி!

image

தி.மலை; ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30), நேற்று முன் தினம் இரவு கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டையைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவரான மோகனம்(55) தனது நண்பர் செல்வத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முருகன் மீது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், அரசு பஸ் டிரைவர் மோகனம் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!