News September 11, 2025
தி.மலை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, 20 ஆண்டுகள் சிறை

வந்தவாசி அருகே உள்ள அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(32). கட்டிட மேஸ்திரியான இவர் 2018ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்துவந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். “வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் (செப்.10) தீர்ப்பளித்தது.
Similar News
News September 11, 2025
தி.மலை: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

தி.மலை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News September 11, 2025
தி.மலை: மான் வேட்டையாடிய நபர் கைது

தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் பகுதியில் மான் வேட்டை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு ரோந்து சென்றது. அப்போது, வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெருமாள் என்பவர் மான் வேட்டையாடியது தெரியவந்தது. அவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வனத்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News September 11, 2025
தி.மலை: லிப்ட் கொடுத்து, மூதாட்டியிடம் வழிப்பறி

ஆரணி ஒண்டிகுடிசை கிராமத்தில் மலர்(60) என்ற மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் லிப்ட் கொடுப்பதாக கூறி அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.