News February 7, 2026

தி.மலை கோயில் முன்பு கத்தியுடன் ரகளை!

image

தி.மலையில் போலி சாமியார் ஒருவர் பாக்கெட் கத்தியை வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றும் இடத்தில் போலி சாமியார்கள் இருவர் போதையில் போலி கத்தியை காட்டி மிரட்டி அட்ராசிட்டி செய்தனர். இதனால் அங்கு இருந்த அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்

Similar News

News February 11, 2026

தி.மலை: மூதாட்டியை துரத்தி துரத்தி கடித்த குரங்கு

image

செங்கம், மேலப்பாளையம் வீதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரை நேற்று குரங்கு ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. இதனால் அவருக்கு தலையில் 4–5 தையல்கள் போடப்பட்டுள்ளது. செங்கம் நகரப் பகுதியில் குரங்குகள் மற்றும் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு அச்சமும் இடையூறும் ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 10, 2026

தி.மலை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

தி.மலை: VOTER ID இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!