News January 10, 2026

தி.மலை: கொடூரனுக்கு வாழ்நாள் சிறை

image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் பழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (38) என்பவர், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தி.மலை POCSO நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (09.01.2026) தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Similar News

News February 4, 2026

தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

தி.மலை கலெக்டர் அறிவித்தார்!

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற பிப்.9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு நிறுவனங்கள், மாவட்ட மின் உற்பத்தி, அரசு போக்குவரத்து கழகம், செய்யாறு சர்க்கரை ஆலை போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். www.apprenticeshipindia.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம், என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

தி.மலை: மின்சார வாரியம் ஷாக்! பேரூராட்சி ராக்!

image

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் மின்கமத்துடன் சேர்த்து வணிக வளாகத்திற்கு கான்கேர்ட் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் அருகில் பேரூராட்சி சார்பில் இரண்டு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் குறுக்கே மின்கம்பம் செல்வதால் அதோடு சேர்த்து கான்கேர்ட் போட்ட சம்பவம் ‘நீங்க வேற லெவல் சார்’ என்று சொல்லும்படி உள்ளதாக கிண்டல் அடித்து வருகின்றனர்.

error: Content is protected !!