News February 11, 2026

தி.மலை: :கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC ஐ உருவாக்குங்க. SHARE!

Similar News

News February 12, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

ஆரணி அருகே அலறியடித்து ஓடிய மக்கள்!

image

தி.மலை: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் குப்பைகளை கொட்டி, எரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(பிப்.11) மரத்தடியில் வைக்கப்பட்ட தீ, காற்றின் வேகத்தில் மரத்தைப் பற்றியது. இதையடுத்து மரம் கொளுந்து விட்டு எரிந்து விழுந்தது. இதைக் கண்ட அருகே இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

News February 12, 2026

தி.மலை: நடுரோட்டில் அட்டகாசம்; பிறந்தநாள் ரணகளமானது!

image

வந்தவாசியில் தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழாவில் விதிகளை மீறிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாள் விழாவில் சாலையில் பட்டாசு வெடித்து கிரேன் மூலம் மாலை அணிவித்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!