News January 26, 2026

தி.மலை: கூலி தொழிலாளி கொடூர பலி!

image

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மாடுகளை மேய்த்து கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.25) மாடுகள் மேய்த்து கொண்டிருக்க போது ஒரு மாடு கன்னியப்பனை முட்டியது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 26, 2026

குடியரசு தின விழாவில் சுகாதார துறை சார்பில் விருது

image

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் 77வது குடியரசு தினத்தை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதாரத் துறை சார்பாக, கொழப்பலூர் வட்டார மருத்துவ அலுவலர் M.அருண்குமார் சிறந்த மருத்துவராகவும், மடம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் N.ஆனந்தன் சிறந்த மருந்தாளுனராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மா.சுகாதார அலுவலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

News January 26, 2026

தி.மலை: ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

image

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க

News January 26, 2026

தி.மலை: வீடு கட்டப் போறீங்களா? இது அவசியம்!

image

தி.மலை மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <>-1 <<>>என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!