News October 29, 2025

தி.மலை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,

1.கூட்டு பட்டா,

2.விற்பனை சான்றிதழ்,

3.நில வரைபடம்,

4.சொத்து வரி ரசீது,

5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்

இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 29, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

தி.மலை: 19 வயது வாலிபர் மீது போக்சோ!

image

தி.மலை: செய்யாறு அருகே 19 வயது இளைஞரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் திருமண பேச்சால் இருவரும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி 3 மாதம் கருவுற்றது தெரியவந்தது. மகளிர் காவல் நிலையம் POCSO 2012, பிரிவு 3, 4, 6 மற்றும் சிறுவர் திருமணத் தடுப்பு சட்டம் 9, 11 கீழ் வழக்கு பதிவு செய்து பெற்றோர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.

News October 29, 2025

தி.மலை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!